Saturday, March 12, 2011

மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை நிறுத்தக்கூடாது: தேர்தல் அதிகாரியிடம் நேரில் முறையீடு

சென்னை, மார்ச் 11-

தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை வழங்கும் திட் டத்தை நிறுத்தக்கூடாது என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வெள்ளியன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் நேரில் மனு அளித்து முறையிடப்பட்டது.

நாடு முழுவதும் வாழக்கூடிய அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அடை யாள அட்டை மத்திய அரசு உதவியுடன் மாநில அரசாங்கங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இது மாற்றுத் திறனாளிகளுக் கான 1995 ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப் படையில் அவர்களின் உரிமையாக அறி விக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தனியான மருத் துவர் குழுக்களைக் கொண்டு வழங்கப் பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக தேர்தலைக் கார ணம் காட்டி, எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக இந்த அடையாள அட்டை வழங் கும் திட்டத்தை மாநில மாற்றுத் திற னாளிகள் நலத்துறை நிறுத்தி வைத்துள் ளது. இதனால் அடையாள அட்டை வழங்கப்படாமல் பல மாவட்டங்களில் திருப்பி அனுப்பப்படுவதால், பல சிரமங் களையும் ஏமாற்றத்தையும் மாற்றுத் திற னாளிகளும் அவர்களின் பெற்றோரும் சந்தித்துள்ளனர்.

இது சம்பந்தமாக மாநில மாற்றுத் திற னாளி நல ஆணையரிடம் நேரில் கோரிக்கை வைத்தபொழுது, அவரும் தேர்தல் விதி களை காரணம் காட்டி மறுத்துவிட்டார். அதனால் வெள்ளியன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் மாற்றுத் திறனாளி களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் என்பது ஏற்கனவே நடைமுறை யில் உள்ள சட்டத்தின் அடிப்படை யிலான திட்டம் என்பதால் இத்திட்டத் திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர அனுமதிப்பதோடு மாற்றுத் திற னாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சொல்ல முடி யாத துயரங்களைத் தவிர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், இப்பிரச் சனையில் தலையிடுவதாக உறுதி அளித் துள்ளார்.

இதே போன்று தமிழ்நாடு உடல் ஊன முற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினருமான பி.சிம்மச்சந்திரனும் தனியாக மனு அளித்து இதே கோரிக்கை யை வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, March 8, 2011

முதல் அமைப்பு கூட்டம்


புதுச்சேரி மார்ச் 2
மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைளை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச்செய்து நிறைவேற்ற வேண்டும் என்று புதுச்சேரி அனைத்து வகைமாற்றுதிறனாளிகள் உரிமைக்களுக்கான கூட்டமைபு வலியுருத்தியுள்ளது.
புதுச்சேரி அனைத்து வகைமாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்கள் உரிமைக்களுக்கான கூட்டமைபின் முதல் அமைப்பு கூட்டம் வேங்கட்டாநகர் புதுவைதமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ் மாநில அமைப்பாளர் நம்புராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.டிஒய்எப்கஜ பிரதேச பொருளாளர் பிரபுராஜ் வாழ்த்தி பேசினார்.இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் புதுச்சேரி தலைவராக ராஜாங்கம்,செயலாளராக சரவணன்,பொருளாளராக நக்கிரன்,மற்றும் நிர்வாகிகளாக மாயவன்,வடிவேல்,முருகன்,ஜெகன், உள்ளிட்டோர் தேர்வுசெய்யப்பட்டனர். மேலும் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்பில் 3சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.மாதம் வழங்கப்படும் =ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக வழங்கவேண்டும்.இக்கோரிக்கைகளை வரும் சட்டமன்றதேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் செய்ய வேண்டும். என்பன தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.இக்கூட்டத்தில் திரளான மாற்றுதிறனாளிகள் பங்கேற்றனர்.
படம் உள்ளது.