
புதுச்சேரி செப்-13
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்பில் 3சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்த கோரி புதுச்சேரியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
என்.ஆர் காங் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள படி மாற்றுதிறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.20 மாதமாக வழங்கபடாமல் நிலுவையில் உள்ள 15கிலோ இலவச அரிசியை வழங்க வேண்டும்.நுhறு சதவீதம் மாற்றுதிறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு 3சதவீத இடஒதுக்கீட்டை கல்வியிலும் வேலைவாய்பிலும் அரசு அமல் படுத்த வேண்டும்.மாற்று திறனாளிகளுக்கு அனைத்து சலுகையும் கிடைக்கும் வகையில் ஒரே அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த இப்போராட்டத்திற்கு புதுச்சேரி அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதுவை செயலாளர் இரா.சரவணன் தலைமைதாங்கினார்.இத்தர்ணாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் தமிழ் மாநில செயலாளர் நம்பிராஜன் பங்கேற்று பேசினார்.சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,முஎகச வின் தமிழ்மாநில துணைபொது செயலாளர் சு.ராமச்சந்திரன்,சிஜடியு உடல் உழைப்போர் சங்க பொருளாளர் குமார், மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் ஜெகன்,முருகன்,மாயவன்,லோகநாதன்,குப்புசாமி,சரோஜ உள்ளிட்ட திரளான மாற்று திறனாளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment